காதலரின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் நடிகை

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் நடித்து வரும் நடிகை ஒருவர் அவரது காதலரின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறாராம்.

காதல் என்பதற்கு மாற்று பெயரில் மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களாலும் ரசித்து பார்க்கப்பட்ட படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் ஒருவரான அந்த நாயகி, அவ்வப்போது தமிழிலும் நடித்து வருகிறார்.

தமிழில் ரவுடி நடிகருடனும் நாயகி நடித்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில் ஒல்லி நடிகர் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ், மலையாளம் என எந்த மொழியிலும் போதிய வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

எனினும் தற்போது, ஆங்கில படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதேநேரத்தில், நாயகி தற்போது, அவரது காதலரின் கட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை ஒருவரை காதலிப்பதாகவும், தற்போது அவரது கட்டுப்பாட்டில் தான் நாயகி இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. மேலும் அவரது சொல்படி தான் நடக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறாராம். இது ஒரு சில நேரத்தில் டார்ச்சர் என்று தோன்றினாலும், தனது நன்மைக்காக தான் காதலர் இவ்வாறு செய்கிறார் என்று நாயகி தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்கிறாராம்.