கேரளாவில் `விவேகம்' கொண்டாட்டம்: அஜித்துக்கு பிரமாண்ட ‘கட்-அவுட்’

கேரளாவில் `விவேகம்' படத்திற்கான கொண்டாட்டம் தொடங்கியிருக்கிறது. அஜித்துக்கு இதுவரை இல்லாத பிரமாண்டமாண ‘கட்-அவுட்’டுகள் வைக்கப்பட்டுள்ளன.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை மறுநாள் வெளியாக இருக்கும் படம் `விவேகம்'.

இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றான விவேகம் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். தல அஜித் - காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், கட் அவுட் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது என அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் இந்த கொண்டாட்டம் சூடுபிடித்திருக்கிறது.

கேரளாவில் போஸ்டர்கள், பிளக்ஸ், ‘கட்-அவுட்’கள் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் அஜித் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரை எந்த நடிகருக்கும் இல்லாத வகையில் 90 அடி உயர பிரமாண்ட கட்-அவுட் ஒன்றை உருவாக்கி உள்ளனர். ‘விவேகம்' கேரளாவில் 309 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. முதல் நாளில் மட்டும் சுமார் 1000 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 50 தியேட்டர்களில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இலங்கை யாழ்பாணத்திலும் அஜித் ரசிகர்கள் கட்-அவுட்களை வைத்து படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.