நடந்து செல்லும் போது கணவனுக்கு முன்னால் சென்றதால் மனைவிக்கு விவாகரத்து

சவூதி அரேபியாவில் நடந்து செல்லும் போது கணவனின் பேச்சைக் கேட்காமல் முன்னால் நடந்து சென்றதால் விவகாரத்து வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவூதியில் சிறிய காரணங்களுக்காக விவாகரத்து கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வரிசையில் மனைவியின் சிறிய செயலுக்காக கணவன் விவாகரத்து கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கணவன் - மனைவி இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மனைவி கணவனுக்கு முன்னால் நடந்த சென்றதாக கூறப்படுகிறது. முன்னால் நடந்து செல்லக் கூடாது என கணவன் பல தடவை எச்சரித்தும் அப்பெண் நிற்காமல் நடந்து சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த கணவன் விவாகரத்து வழங்க முடிவு செய்து மனைவிக்கு விவாகரத்து வழங்கியுள்ளான்.

இதே போன்று பல சம்பவங்கள் சவூதி அரேபியாவில் அரங்கேறி வருகிறது. மனைவி இரவு உணவின் போது ஆட்டின் தலையை பரிமாறாத காரணத்திற்காக கணவன் விவாகரத்து வழங்கியுள்ளான். அதே போல் மற்றொரு பகுதியில் கொலுசு அணிந்த குற்றத்திற்காக மனைவியை விவாகரத்து செய்த சம்வமும் அரங்கேறியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் லத்தீபா ஹமீத் கூறுகையில், இளைய சமுதாயத்தினருக்கு அவர்களது குடும்பத்தினர் இது குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும். அதே போல் குடும்ப பிரச்சனைகளை எதிர் கொள்வது குறித்த விழிப்புணர்வை அவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.