எம்எல்ஏ வீட்டிற்கு சென்றாரா சசிகலா: புதிய தகவல்

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் சிறைத்துறை அதிகாரிகளின் உதவியோடு வெளியில் ஷாப்பிங் சென்று வரும் 2 வீடியோ காட்சிகள் வெளியாகின.

இந்த தொடர்பான வீடியோக்களை முன்னாள் சிறைத்துறை டிஜஜி ரூபா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் வேறு ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார். அதில், சிறைக்கு அருகிலுள்ள ஒசூர் எம்எல்ஏ வீட்டிற்கு சசிகலா சென்றதை நிரூபிக்கும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக கர்நாடக டிஐஜி ரூபா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா விவகாரத்தில் கர்நாடக உள்துறை அமைச்சகத்துக்கு சிறை அதிகாரிகள் தவறான தகவல் தந்து கொண்டிருப்பதாக ரூபா குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.