சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ்

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக எடுக்க உள்ளார்.

இதில் கீர்த்திசுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார். அவரது கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் அலுரிசக்ரபாணி என்ற கதாசிரியர் வேடத்தில் நடிக்கிறார்.

சாவித்திரி நாயகியாக நடித்து பெயர் வாங்கிய பிரபல படங்களுக்கு கதை எழுதியவர் இந்த கதாசிரியர் தான். சாவித்திரியின் படங்களை தயாரித்த பிரபல திரைப்பட கம்பெனியில் இவரும் ஒரு பங்குதாரர். எனவே, இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.