எங்களிடம் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்: கும்பகோணத்தில் திவாகரன் பேட்டி

தங்களிடம் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும் எடப்பாடி உள்ளிட்ட ஊழல் அமைச்சர்கள் 5 பேரை நீக்க வேண்டும் என கும்பகோணத்தில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

கும்பகோணத்தில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல விழாவில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று கலந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் மற்றும் ஊழல் அமைச்சர்கள் 5 பேரை நீக்க வேண்டும். படித்த இளைஞர்களை கொண்ட புதிய அமைச்சரவை அமைய வேண்டும்.

சபாநாயகர் தனபாலை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும். மைனாரிட்டி எடப்பாடி அரசுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்தார் என கூறுவது தவறான தகவல். பெங்களூருவில் பாதுகாப்பு இல்லாமல் எப்படி வெளியே செல்ல முடியும்.

தமிழக ஊழல் அரசால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது. எங்களிடம் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். வைத்திலிங்கத்தை நீக்கியது போல் மேலும் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு திவாகரன் கூறினார்.