புதிய 50 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வந்தது: 200 ரூபாய் நோட்டும் வருகிறது

புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளன.

புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.

இந்த புதிய ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு நேற்று கண்டெய்னர்களில் ரூபாய் நோட்டுகள் வந்தன.

இந்த நோட்டுகள் சென்னை மற்றும் கோவையில் இன்று முதல் புழக்கத்துக்கு வந்தன.

அடுத்தடுத்து பண கட்டுகள் வரவிருப்பதாகவும் அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் புழக்கத்துக்கு வந்து விடும் என்றும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் ஒரு புறத்தில் காந்தி படம் மற்றொரு புறத்தில் மிகப்பழமை வாய்ந்த விஜயநகர பேரரசில் தலைநகராக விளங்கிய ஹம்பி நகரத்து இடிபாடுகளில் இருந்து கண்டறியப்பட்ட விட்டலர் கோவில் கல்ரதம் இடம் பெற்றுள்ளது. இதுதான் கர்நாடக அரசின் சுற்றுலா துறை சின்னமாகவும் இருக்கிறது.

மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமும் இடம் பெற்றுள்ளது.

புதிதாக 200 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் அறிமுகமாகிறது. இந்த நோட்டுகள் இந்த மாத இறுதிக்குள் புழக்கத்துக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.