எப்படி இருந்த நாயகி இப்படி ஆயிட்டார்: வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்

நாயகி ஒருவர் தனது பழைய நிலைக்கு மீண்டும் திரும்பியிருப்பதால் மற்ற நாயகிகள் வயிற்றெரிச்சலில் இருக்கிறார்களாம்.

உயரமான நடிகை ஒருவர் சிறிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அபரிமிதமாக அதிகரித்திருந்தார். அந்த படத்தில் நடித்து முடித்து பல மாதங்களாகியும் நடிகையால் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. மாதக்கணக்கில் உடற்பயிற்சி செய்தும், உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தும் பயன் இல்லை.

இதனால் பிரமாண்ட படத்தில் கூட குண்டான உடல் கட்டுடன் தான் நடித்தார். எனவே, நடிகை தொடர்பான காட்சிகளை கிராபிக்ஸ் செய்து அவரை ஒல்லியாக காட்டினார்கள். அதற்காக பல கோடிகளையும் செலவு செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், உடல் எடையை குறைக்க தொடர்ந்து யோகா, உணவு கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சி என செய்து வந்த நாயகிக்கு தற்போது அதற்கான பலன் கிடைத்து இருக்கிறது. சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் நடிகை தனது எடையை குறைந்து பழைய உடற்கட்டுக்கு திரும்பி இருப்பது தெரிய வந்துள்ளது.

உடல் மெலிந்து இருக்கும் நடிகையின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்து அவர் நடிக்கும் புதிய படங்களில் நடிகையை பழைய உடல்கட்டுடன் ஒல்லியாக காண இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகை தனது பழைய உடற்கட்டுக்கு மாறியிருப்பது சில நடிகைகளுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம்.